Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரை மணி நேரத்தில் 100K ஃபாலோயர்ஸ்... மலாலாவின் முதல் ட்வீட் இதுதான்!

மிகக் குறைந்த வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பாகிஸ்தானின் பெண்கள் கல்வி ஆர்வலருமான மலாலா ட்விட்டரில் இணைந்துள்ளார். அவர் ட்விட்டரில் இணைந்த அரை மணி நேரத்துக்குள் 100K ஃபாலோயர்ஸ்களை கடந்துள்ளார். ட்விட்டரில் இணைந்து அவர் ட்வீட்டிய அனைத்து ட்வீட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Malala

 

அவரின் ட்வீட்களின் விவரம், "ஹாய் ட்விட்டர். பள்ளிப் படிப்பில் இன்று எனது கடைசி நாள். ஆனால், ட்விட்டரில் முதல் நாள். பள்ளிப் பருவம் முடிந்தது சற்று வருத்தமாக இருந்தாலும், எனது எதிர்காலத்தை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். பல லட்சக்கணக்காக பெண்கள், பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத சூழலில் கஷ்டப்படுகின்றனர். அடுத்த வாரம் முதல், மத்திய கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்கா சென்று, அங்குள்ள பெண்களைச் சந்திக்க உள்ளேன். 

 


ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட கதை உண்டு. கல்வி மற்றும் சம உரிமைக்காகப் போராட பெண்களின் குரலே சிறந்த ஆயுதம். ட்விட்டர் மற்றும் பொதுவெளியில் பெண்களுக்காக நான் குரல் கொடுப்பேன். என்னுடன் நீங்களும் இணைவீர்களா?" என்று ட்வீட்டியுள்ளார். 

tter.com/widgets.js" charset="utf-8">


இதையடுத்து ட்விட்டர் நிர்வாகம் முதல் பல்வேறு தலைவர்கள் மலாலாவை வரவேற்று ட்வீட் தட்டியுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close