Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பொறுமை இழக்கக்கூடாது!'- வட கொரிய பிரச்னையில் புதினின் ஐடியா

வட கொரியா, தொடர்ந்து அணு ஆயுதச் சோதனை நடத்திவருவது, உலக நாடுகள் பலவற்றுக்கு கவலை அளித்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 'வட கொரியப் பிரச்னையில் பொறுமை இழக்கக்கூடாது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின்

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில், ஜி-20 மாநாட்டில் பங்கேற்றிருக்கும் ரஷ்ய அதிபர் புதின், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அவர்களை நேரில் சந்தித்து, வட கொரியப் பிரச்னைகுறித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய புதின், 'வட கொரிய அணு ஆயுதப்  பிரச்னை மிகவும் தீவிரமானதுதான். ஆனால், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பொறுமை இழந்து கையாண்டுவிடக்கூடாது. எதார்த்தத்துக்கு ஏற்ற ஒரு முடிவைத்தான் இந்த விஷயத்தில் எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும், தென் கொரிய அதிபர் மூன் அவர்களும், 'சில நிபந்தனைகளுக்கு உட்பட்டால், வட கொரிய அதிபரை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close