Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இவர்கள்தான் உங்களை காயப்படுத்தினார்களா!'- ட்ரம்ப்புக்கு பாசக்கரம் நீட்டிய புதின்

பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அரங்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பேசிக் கொண்ட விஷயம், சர்வதேச அளவில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

புதின் மற்றும் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜி-20 மாநாட்டின்போது சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்புக்கு முன்னர், இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளனர். அப்போது புதின், ட்ரம்ப்பிடம் செய்தியாளர்களை நோக்கி சைகைசெய்து, 'இவர்கள்தான் உங்களைக் காயப்படுத்துகிறார்களா' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ட்ரம்ப், 'சரியாகச் சொன்னீர்கள். இவர்கள்தான் என்னைக் காயப்படுத்துகிறார்கள்' என்று பதிலளித்துள்ளார். இதை, அவர்கள் சத்தமாகப் பேசவில்லை என்றாலும், அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்குக் கேட்கும்வகையில் பேசியுள்ளனர். இப்படி இரு நாட்டுத் தலைவர்கள், பத்திரிகையாளர்களைப் பற்றி பொது அரங்களில் பேசியது, குழுமி இருந்தவர்களை மிரட்சியடையவைத்தது. 

வெகு நாள்களாக, ட்ரம்ப்புக்கும் அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கும் மோதல்போக்கு நிலவிவருகிறது. இதுகுறித்து, ட்ரம்ப் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக கண்டனப் பதிவுகளை ட்வீட் செய்துவருகிறார். இந்நிலையில்தான், புதின் ட்ரம்ப்பிடம் அப்படியொரு கேள்வியைக் கேட்டார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close