Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''எந்த ஆபத்தையும் துருக்கி சந்திக்கும்!'' - அதிபர் எர்டோகன்

எர்டோகன்

''ஆயுதம் வழங்குவதால் ஏற்படுகிற ஆபத்தைத் தனது நாடு சந்திக்கத் தயாராக இருக்கிறது'' என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். பிடியிலிருந்து ராக்கா நகரத்தை விடுவிக்க குர்திஷ் போராளிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கிவருகிறது. ஆனால், இந்தக் குழுவான ஒய்.பி.ஜி ஏற்கெனவே அமெரிக்கா உள்பட பல மேலை நாடுகளால் பயங்கரவாத இயக்கமாகத் தடை விதிக்கப்பட்ட பி.கே.கே இயக்கத்தின் ஒரு பிரிவாகும் என்று துருக்கி குற்றஞ்சாட்டுகிறது. தனது தென் கிழக்கு எல்லையில் துருக்கிப் படைகளுடன் மோதிவரும் பி.கே.கே-வுக்கு மறைமுகமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உதவிவருகின்றன என்கிறார் அதிபர் எர்டோகன்

கடந்த மே மாதம் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசியபோதும், ஜி-20 மாநாட்டில் சந்தித்தபோதும் எர்டோகன் இதன் ஆபத்தை எடுத்துரைத்தார். ஆயுதம் வழங்குவதால் ஏற்படுகிற ஆபத்தைச் சந்திக்க தனது நாடு தயாராக இருப்பதாகத் தற்போது தெரிவித்துள்ளார்.  

சிரியாவின் போராளிக் குழு ஒன்று தென் மேற்கு எல்லையில் துருக்கி ராணுவத்துடன் இணைந்து குர்திஷ் போராளிகளையும், ஐ.எஸ் இயக்கத்தையும் ஒருசேர எதிர்த்துப் போர் செய்கிறது. கடந்த ஆகஸ்ட்டில் இந்தப் படை எல்லையைக் கடந்து போரிட்டது. இப்புதிய கூட்டணியினால் ஏற்கெனவே குழம்பியிருக்கும் சிரிய உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடையும். அமெரிக்காவும், ரஷ்யாவும், தென் மேற்கு சிரியாவில் போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. 

இதன் எதிரொலியாகத்தான் அதிபர் எர்டோகன் இவ்வாறு பேசியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close