Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போர் ஒத்திகையில் அமெரிக்கா... வடகொரியாவுக்கு பதிலடியா?

சர்வதேச நாடுகளின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வந்த வடகொரியாவுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா போர் ஒத்திகையில் ஈடுபட்டது.

அமெரிக்கா போர் ஒத்திகை

அமெரிக்காவுக்கு நெருக்கடிகொடுக்கும் விதமாக, வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்தது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.  தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவருகிறது வட கொரியா. அந்த நாட்டின் மீது, ஐநா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வட கொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், உலக நாடுகளுக்குத் தொடர் அச்சுறுத்தல் அளித்து வரும் வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மிகச் சமீபத்தில் கூட்டு போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டது. வான்வழித் தாக்குதல்கள், குண்டு மழை பொழிதல் எனப் பலகட்ட போர் பயிற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close