Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி-20 மாநாட்டில் ட்ரம்ப் எதற்காக அலைந்தார் தெரியுமா?

சமீபத்தில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தங்குவதற்கு சரியான ஓட்டல் அறை கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.

ட்ரம்ப்

உலகின் முன்னணி நாடுகள் பலவற்றும் இந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்று, உலகளவில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக இந்த பயணத்தின் போது ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை நேரில் சந்தித்து இரு நாட்டு உறவைப் பற்றி பேசினார். 

இந்நிலையில் இந்தப் பயணத்தின் போது தங்குவதற்கு அதிபர் ட்ரம்ப்பின் அலுவலப் பணியாளர்கள் அவருக்கு ஓட்டல் அறை புக் செய்வதற்கு மறந்துவிட்டார்களாம். கடைசி நேரத்தில் ஓட்டல் புக் செய்ய ட்ரம்ப் அலுவலகத்தினர் முயன்ற போது மாநாடு நடப்பதால், ஒரு ஓட்டல் அறை கூட கிடைக்கவில்லையாம். பின்னர், ஹாம்பர்க் நகரத்தில் இருக்கும் செனெட் கெஸ்ட்-ஹவுஸில் ட்ரம்ப் தங்கியதாக கூறப்படுகிறது. மேலும் ட்ரம்ப்புடன் வந்த அமெரிக்க குழு ஹாம்பர்க்கில் இருந்த அமெரிக்க தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டனராம். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close