Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரலாற்று திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான்.. உலக ஒலிப்பதிவு விருது கிடைக்குமா?

2017 உலக ஒலிப்பதிவு விருதுக்கு (World Soundtrack Public Choice Award) இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ar.rahman
 

ஏ.ஆர்.ரகுமான், ‘வைஸ்ராய் ஹவுஸ்’ என்ற ஆங்கில படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் இறுதி நாட்களை பற்றிய ஆங்கில படம்தான் ‘வைஸ்ராய் ஹவுஸ்’ (Viceroy's House). வைஸ்ராய் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை  குரிந்தர் சத்தா என்பவர் இயக்கியுள்ளார்.

இங்கிலாந்தில் இந்தாண்டு வெளியான  இத்திரைப்படம்  'Partition: 1947' என்ற பெயரில் இந்தியாவில் வரும் ஆகஸ்டு மாதம் வெளியாகிறது.’வைஸ்ராய் ஹவுஸ்’ திரைப்படத்தின் ஒலிப்பதிவுக்காக ஏ.ஆர்.ரகுமானின் பெயர் ’2017 உலக ஒலிப்பதிவு’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை ஏ.ஆர்.ரகுமானே தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த விருதை பெற வேண்டுமானால் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். அதற்கான லின்க்கையும் ரகுமான் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close