Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொசூலில் குழந்தையுடன் வெடித்துச் சிதறிய தாய்... மனதை உலுக்கும் கொடூர சம்பவம்!

மோசூலில் தற்கொலைப்படை பெண்

ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த மொசூல் நகரத்தை ஈராக் அரசு இன்று மீட்டது. போர் உக்கிரமடைந்ததால் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்படும்போது, தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் தன் குழந்தை கையில் வைத்திருந்தபடியே வெடியை இயக்கச் செய்து இறந்துள்ளார். கையில் இருந்த அவர் குழந்தையும் இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறியது. இப்படி அவர் செய்வதற்கு சில கணங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலால் இரண்டு ஈராக் ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 

15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்த மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக்கொண்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் தீவிர தாக்குதலை ஈராக் ராணுவம் தொடங்கியது. இந்தப் போரினால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இவர்களுக்கும் நேற்று உச்சக்கட்ட போர் நடந்தது. இதில் ஈராக் ராணுவம், மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து முற்றிலுமாக கைப்பற்றியது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close