Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மொசூல் நகர் மீட்பு...' ஈராக் பிரதமர் அறிவிப்பு!

ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மொசூல் நகர் முழுவதுமாக மீட்கப்பட்டுவிட்டதாக, ஈராக் பிரதமர் அறிவித்துள்ளார்.

Haider al-Abadi

 

2014 ஜூன் மாதத்தில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஈராக்கின் மொசூல் நகரத்தைக் கைப்பற்றியது. அது முதல், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு மொசூல் முக்கியத் தளமாக இருந்துவந்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாகவே மொசூல் நகரை மீட்கும் நோக்கில் ஈராக் அரசு, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் அரசுக்கு அமெரிக்காவும் உதவவே, ஐஎஸ் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டன. ஆனால், இந்தச் சண்டையில் பொதுமக்களும் அதிக அளவு உயிரிழந்தனர்.


குறிப்பாக, 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து, அம்மக்களிடம் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் இருந்த எஞ்சிய பகுதியையும் கைப்பற்றும் முனைப்பில் அரசுப்படை தீவிரமாகக் களமிறங்கியது.  ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், அரசுப்படைக்கும் நேற்று உச்சக்கட்டப் போர் நடந்தது. இதில், ஈராக் ராணுவம், மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து முற்றிலுமாகக் கைப்பற்றியது.


இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, அந்த நாட்டுப் பிரதமர் ஹைதர் அல்-அபாதி வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மொசூல் நகர் மீட்கப்பட்டுவிட்டது. இதற்காகப் போராடிய வீரர்களுக்கும் ஈராக் மக்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். ஆனால், அங்கிருக்கும் உள்ளூர் தொலைக்காட்சிகள், "மொசூல் நகர் முழுவதுமாக மீட்கப்படவில்லை. ஒரு பகுதி ஐஎஸ் தீவிரவாதிகள் வசமே உள்ளது" என்று கூறியுள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close