Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடை விதித்த அரபு நாடுகளிடம் நஷ்டஈடு கேட்கிறது கத்தார்!

அரபு நாடுகள் கத்தார் நாட்டின் மீது விதித்துள்ள தடையால் அந்நாட்டுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என கத்தார் கோரியுள்ளது.

கத்தார்

தீவிரவாதத்துக்குத் துணைபுரிவதாகக் குற்றம்சாட்டப்பட்டு கத்தார், வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. சவுதி, பக்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன. வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கத்தாருக்கு சில நிபந்தனைகள் விதித்து அதற்கு ஒப்புக்கொண்டால் தடை விலக்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்த போது அதற்கு கத்தார் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதைத்தொடர்ந்து, அரபு நாடுகளின் நடவடிக்கையால் கத்தார் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வணிக, வர்த்தக மற்றும் தூதரக உறவு முறிக்கப்பட்டதால் கத்தார் நிறுவனங்கள், மாணவர்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் குற்றம் சுமத்தி வருகிறது. இதற்கெல்லாம் ஈடு செய்யும் வகையில், அரபு நாடுகள் கத்தாருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close