Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைரல்: கைதாவதற்கு முன் காதலியிடம் தன் காதலைச் சொன்ன இளைஞர்!

காதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தியதை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா பகுதியில், தாம்சன் என்ற இளைஞர் தான் கைதாவதற்கு முன், காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். தாம்சன் கடந்த 4-ம் தேதி, தனது காதலை காதலியிடம் வெளிப்படுத்தத் திட்டமிட்டிருந்தார்.

இதனிடையே, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறை அவரை கைதுசெய்வதற்குச் சென்றுள்ளது. இதையடுத்து, காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு, பின்னர் தனது காதலைச் சொல்லியுள்ளார் தாம்சன். அவர் காதலை வெளிப்படுத்தும்போது, தாம்சன் கையில் விலங்கை மாட்டியிருந்தனர் காவல்துறையினர்.

இதையடுத்து, காதலியின் கையில் முத்தம் கொடுத்து, தனது காதலைச் சொல்லிவிட்டு சிறைக்குச் சென்றார் தாம்சன். அன்றைய தினம், தாம்சனின் பிறந்தநாள் என்றும் சொல்லப்படுகிறது. காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் உடலிலிருந்து கேமரா மூலம் இந்தக் காட்சி வெளி உலகத்துக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து வீடியோ வைரலாகிவருகிறது. 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close