Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியர்கள் 10 பேரை பலிகொண்ட சவுதி தீ விபத்து!

சவுதி அரேபியாவில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 11 பேரும் இந்தியா மற்றும் வங்காள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சவுதி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  

saudi fire
 

சவுதியின் தென் மேற்கு மாநிலமான நஜ்ரானில்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நஜ்ரானில், இந்தியா மற்றும் வங்காள நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில், நேற்றிரவு திடீரெனத் தீ பிடித்துள்ளது. அந்த வீட்டில் காற்றோட்ட வசதி இல்லை. ஜன்னல்களும் இல்லை என்று கூறப்படுகிறது. உள்ளே இருந்தவர்களில் 11 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2015 -ம் ஆண்டு, சவுதி அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களின்படி, பிற நாடுகளிலிருந்து வேலைக்காக சவுதி வருபவர்களின் எண்ணிக்கை ஒன்பது மில்லியன். அவர்களில் பெரும்பாலானோர், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். சவுதியில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு இருப்பிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 பேருக்கு மேல் தங்கியிருக்கும் ஒரு வீட்டில், போதுமான காற்றோட்ட வசதியில்லாததால்தான் நேற்று 11 பேர் பலியாகி யுள்ளனர். மேலும், தீ விபத்துக்கான காரணம்குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 


இதனிடையே, சவுதியில் பலியான இந்தியர்கள்குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ள சுஷ்மா ஸ்வராஜ், “சவுதி தீ விபத்தில் 10 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 
 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close