Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முற்றுகிறது சீன விவகாரம்: நாளை கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்!

இந்திய-சீன எல்லையான சிக்கிம் பகுதியில், சீன ராணுவம் குவிந்துவரும் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, நாளை மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்துள்ளது.

இந்திய- சீன எல்லை

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக்குழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. 

இதைத் தொடர்ந்து, இருநாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுகிறது. சுஷ்மா ஸ்வராஜ் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் இந்த எல்லைப் பிரச்னைகுறித்து நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளார். சிக்கிம் எல்லையில் சீன ராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close