Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விழாவில் பல்ப் வாங்கிய அமெரிக்க வீரர்!

இஎஸ்பிஎன் ஊடகத்தின் 2017 ஆண்டுக்காக சிறந்த விளையாட்டு வீரர் விருதை அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரசல் வெஸ்ட்ப்ரூக் பெற்றுள்ளார். சிறந்த வீராங்கனையாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

espn
 

ஒவ்வொரு ஆண்டும் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலை இஎஸ்பிஎன்  வெளியிட்டு அவர்களைக் கெளரவிப்பது வழக்கம். இந்தாண்டு ”The ESPYS” என்னும் பெயரில் நடைபெற்ற இவ்விழாவை அமெரிக்க கால்பந்து அணியின் குவார்ட்டர்பேக் வீரரான பெய்டன் மானிங் தொகுத்து வழங்கினார். 

2017-ம் ஆண்டின் தலைசிறந்த விளையாட்டு விருதைப் பெற்றுள்ள கூடைப்பந்து வீரர் ரசல் வெஸ்ட்ப்ரூக் அமெரிக்காவின் ’மதிப்புமிக்க வீரர்’ என்னும் பட்டத்தைப் பெற்றவர். இந்த ஆண்டின் தலைசிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சிமோன் பைல்ஸ் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தங்கம் வென்றவர்.

 

 

The ESPYS விழாவின்போது விருதுபெற்ற முன்னணி வீரர் வீராங்கனைகளை விடவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய  பெய்டன் மானிங்தான் இன்றைய ட்ரெண்ட். பெய்டன் மானிங் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தபோது, அமெரிக்க கூடைப்பந்து வீரர் கெவின் டுரன்ட்டை குறிப்பிட்டு நகைச்சுவையாகப் பேசியுள்ளார். அரங்கே அதிரும்படி சிரிப்பொலி எழுந்தது, ஆனால், பெய்டனின் ஜோக்கிற்கு கெவின் மட்டும் சிரிக்கவேயில்லை. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close