Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''பிசிக்கல் ஷேப் நல்லா இருக்கு'' ட்ரம்ப்பின் புது சர்ச்சை!

ட்ரம்ப்

ட்ரம்ப் செய்வதெல்லாம் சர்ச்சையாகிறதா.. இல்லை சர்ச்சையைத் தேடித் தேடி ட்ரம்ப் செய்கிறாரா என விவாதிக்கும் அளவுக்கு வைரல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ட்ரம்ப். ட்ரம்ப்பின் தற்போதைய ஹாட் சர்ச்சை ஃப்ரான்ஸ் அதிபரின் மனைவியை வர்ணித்ததுதான். 

நேற்று ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா ட்ரம்ப் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல இடத்துக்குச் சுற்று பயணம் சென்றனர். பின்னர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மற்றும் அவருடைய மனைவி பிரிஜிட்டே மேக்ரோன் இருவரையும் சந்தித்துப் பேசினர். அவர்கள் பேசி முடித்து பிரியும் முன்னர், அதிபர் ட்ரம்ப் மேக்ரோனின் மனைவியிடம் "உங்கள் உடலமைப்பு நன்றாக உள்ளது" என்றார். மேக்ரோன் கவனிப்பதற்குள், "அழகாக உள்ளீர்கள்" என்று முடித்தார்.

ட்ரம்ப்புக்கும் அவர் மனைவி மெலானியாவுக்கும் 25 ஆண்டுகள் வித்தியாசம். அதேபோல், மெக்ரோன் மற்றும் அவருடைய மனைவிக்கும் 25 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளன. இதில், வேறுபாடு என்வென்றால் மென்ரோனைவிட அவர் மனைவிதான் வயதில் மூத்தவர். அவர்கள் சந்திப்பில் ட்ரம்ப் இவ்வாறு கூறியது வீடியோவாக பதிவாகியுள்ளது. இதை பிரான்ஸ் அரசின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் அனைவரும் ட்ரம்பை திட்டித் தீர்த்தனர்.

மூன்று நாள்களுக்கு முன்புதான் ட்ரம்ப் ஜெர்மனியின் ஹம்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பும்போது, கடற்படை வீரர் ஒருவரின் தொப்பி கீழேவிழுந்து கிடந்ததை எடுத்துக் கொடுத்து அனைவரையும் நெகிழச் செய்தார். ஆனால், மறுபடியும் வழக்கம்போல சர்ச்சை கிளப்பும் செயலில் ஈடுப்பட்டுள்ளார் ட்ரம்ப்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close