Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே வாரத்தில் 97 மீனவர்களைக் காவு வாங்கிய 'பகாசி தீவு' பிரச்னை... இது நாம் அறிந்திடாத மற்றொரு கச்சத்தீவு!

பகாசி தீவும் மீனவர் பிரச்னையும்

மிழகத்தின் தலையாய பிரச்னைகளில் ஒன்று 'கச்சதீவு' விவகாரம். அன்று பிரதமராக இருந்த இந்திராகாந்தி, கச்சத்தீவை இலங்கையிடம் அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக கடலில் மீன் பிடிக்கப் போன  800 க்கும் அதிகமான நம் மீனவர்களைப் பலிகொடுத்து இருக்கிறோம். இன்னமும் தீராத மிகப்பெரிய பிரச்னையாக இது இருக்கிறது. 
'கச்சத்தீவு' பிரச்னை எப்படி உருவாகியது? அதன் வீரியம் என்ன? அதனால் இன்று எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகின்றன என்பதை நன்கறிவோம். 

நம்மைபோலவே வேறு ஒரு நாடும், தமக்குச் சொந்தமான ஒரு தீவை அடுத்த நாட்டிடம் கொடுத்துவிட்டு பல மீனவர்களின் உயிரை தினம் தினம் இழந்துவருகிறது. அந்த நாடு நைஜீரியா. அந்த நாட்டின் சொந்தமாக இருந்தது 'பகாசி தீவு'. இந்தியா எப்படி அதன் பக்கத்து நாடான இலங்கையிடம் கச்சதீவை விட்டுகொடுத்ததோ, அதுபோல நைஜீரியா தன் பக்கத்து நாடான கேமரூனுக்கு பகாசி தீவை விட்டுக் கொடுத்தது. 

ஆனால் ஒரு சிறு திருத்தம் கச்சதீவை, இந்தியா  அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்கியது. ஆனால் நைஜீரியாவோ பிறநாடுகளின் அழுத்தத்தால் 'பகாசி' தீவை கேமரூனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் இரண்டு நாடுகளிலும் மீனவர்கள் கொல்லப்படுவதன் காரணம் ஒன்றுதான்.   

கடந்த வாரம் பகாசி தீவில் நடந்த கோரச் சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பகாசி தீவில் மீன்பிடிக்கச் சென்ற நைஜீரிய மீனவர்கள் 'மீன்பிடி அனுமதி கட்டணம்' 300 டாலர் கொடுக்காததால், கேமரூன் ராணுவம் அந்த மீனவர்களைக் கொன்று குவித்துள்ளது. கேமரூன் ராணுவத்தால் கொல்லப்பட்ட நைஜீரிய மீனவர்களின் எண்ணிக்கை ஒன்று, இரண்டல்ல... 97 பேர் அதுவும் ஒரே வாரத்தில். 

பகாசி தீவு வரலாறு: ஆப்பரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளின் எல்லையில் பகாசி தீவு அமைந்துள்ளது. 1960-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் நைஜீரியா, தன் நாட்டுக்கு உட்பட்ட 'பகாசி தீவை'  ஆட்சி செய்து வந்தது. இதனால் நைஜீரிய மீனவர்கள் பகாசி தீவில் சுதந்திரமாக மீன்பிடித்து வந்தனர். 

ஆனால் கேமரூன், 'பகாசி தீவு' தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடத் தொடங்கியது. காரணம் பகாசி தீவு எண்ணெய் வளமிக்க ஒரு தீவு. இயற்கை வளமிக்க ஒரு தீவை தன் நாட்டுடன் இணைத்திட வேண்டும் என்று கேமரூன் போராடி வந்தது. இதனால் நைஜீரியா தனது நாட்டு ராணுவத்தை அங்கு நிறுத்தியது. இதனால் நைஜீரிய மீனவர்கள் பயமில்லாமல் பாதுகாப்புடன் மீன்பிடித்து வந்தார்கள். 

கச்சத்தீவு'பகாசி தீவு'க்காக இருநாடுகளும் எதிரிகளாகவே மாறினார். 1981-ம் ஆண்டு நைஜீரியாவுக்கும், கேமரூனுக்கும் இடையே பகாசி தீவில் போர்ச் சூழல் ஏற்பட்டது. ஆனாலும் பகாசி தீவு நைஜீரியாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. இதையடுத்து 1994-ல் ஏற்பட்ட மோதலில் இரு நாடுகளிலும் 34பேர் மரணம் அடைந்தார்கள். அதன்பின்னும் நைஜீரிய மீனவர்களே பகாசி தீவில் மீன்பிடித்து வந்தார்கள்.

எப்படியாவது தன் கட்டுப்பாட்டுக்குள் தீவை கொண்டுவர நினைத்த கேமரூன் கடந்த 2002-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடியது. சர்வதேச நீதிமன்றமும் கேமரூனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்தும் நைஜீரியா 'பகாசி' தீவின் மீதுள்ள தனது உரிமையை யாருக்கும் விட்டுத் தரவில்லை அதன்பின், சில நாடுகளின் தலையீட்டால் 2005-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் 'கிரீன் டீ அக்ரிமென்ட்' ஏற்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் 'பகாசி தீவு' சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு பகாசி தீவிலிருந்து நைஜீரியா தனது ராணுவத் தளவாடங்களைத் திரும்பப் பெறவேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது. அதனால் நைஜீரியா தனது ராணுவத் தளவாடங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இருப்பினும் பகாசி தீவு நைஜீரியாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. 

ஆனால் 2008-ம் ஆண்டு பகாசி தீவு, கேமரூன் நாட்டின் கைகளுக்கு மாறியது அதன் பின் நைஜீரிய மீனவர்கள் அங்கு மீன் பிடிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. பின்னர் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நைஜீரிய மீனவர்கள் பகாசி தீவில்  'மீன்படி அனுமதி' கட்டணமாக 300 டாலரை செலுத்தி விட்டு மீன்பிடிக்கலாம் என்று கேமரூன் அறிவித்திருந்தது. 

ஆனால், நைஜீரிய மீனவர்கள் 'அனுமதி கட்டணம்' செலுத்தமுடியாது என்று சொன்னதுடன், மீன்பிடிப்பையும் தொடர்ந்து வந்தனர். இதனால் கேமரூன் அரசு நைஜீரிய மீனவர்கள் மீது அவ்வபோது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 97 நைஜீரிய மீனவர்களை கேமரூன் அரசு படுகொலை செய்திருக்கிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக நைஜீரிய அரசு விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தாலும் கேமரூன் அரசு இந்தப் படுகொலையை பற்றி எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறது. 
'பகாசி' தீவுக்காக கேமரூன் சொல்லும் ஒரே பதில் "இது எங்களின் இறையாண்மை. பகாசி தீவு ஆரம்பகாலத்திலிருந்தே எங்களுக்குச் சொந்தமான தீவு" என்று சொல்லி வருகிறது.

தங்களுக்குச் சொந்தமான தீவில் மீன்பிடிக்க வரும் அப்பாவி தமிழக மீனவர்களைச் சுட்டுத்தள்ளும் இலங்கைக்கு சற்றும் குறைவில்லாத கேமரூன் செய்த இக்கொடுஞ்செயல் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close