Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லண்டன் கச்சேரி சர்ச்சை... ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த தனுஷ்!

லண்டனில் உள்ள  வெம்ப்லே பகுதியில் சில நாள்களுக்கு முன்னர், 'நேற்று இன்று நாளை' என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இது, பெரும்பான்மையாக தமிழ்ப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சியாகும். ஆனால், இது தெரியாத பல வட இந்தியர்கள், இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வமுடன் சென்றுள்ளனர்.

தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்

நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்ப் பாடல்கள் அதிகம் பாடியதால், வட இந்தியர்கள் பாதியிலேயே வெளியேறிவிட்டனர். அதோடு விடாமல், "தமிழ்ப் பாட்டு மட்டும்தான் பாடுவீர்களா?" என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் பொங்கித்தள்ளிவிட்டனர். இந்த விஷயத்தால் ரஹ்மான் செம அப்செட்டாகிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில், தமிழ்த் திரை நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இதுகுறித்து ரஹ்மான், 'எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த பாடல்களைத் தர முயல்கிறோம். நாங்கள் நேர்மையாக இருக்க முயல்  கிறோம். இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்' என்று பொதுவாகத் தெரிவித்தார்.

இதையொட்டி, நடிகர் தனுஷ் அவரது ஃபேஸ்புக்கில் பதிவுசெய்துள்ளார். தனுஷ், 'ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மொழிகள் கிடையாது. அவரது மொழி, இசை மட்டும்தான். வேறொன்றும் கிடையாது. ரஹ்மான் ரஹ்மான்தான்' என்று ஆதரவுக் குரல் நீட்டியுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close