Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிராணிகள் கவனிப்பு பிசினஸ்: ரூ.418 கோடி நிதித்திரட்டிய ஸ்டார்ட்அப் நிறுவனம்!

பிராணிகள் கவனிப்பு பிசினஸுக்காக சியாட்டலில் உள்ள ரோவர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ரூ.418 கோடி நிதித்திரட்டி உள்ளது. 

பிசினஸ்

குழந்தைகள் கவனிப்புபோல் பிராணிகள் கவனிப்பு பிசினஸ் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலானோர் பிராணிகள் வளர்க்க ஆசைப்பட்டாலும், அவற்றைத் தொடர்ந்து கவனிக்க முடியாத அளவுக்கு பிசியாகவே இருக்கிறார்கள். இந்த நிலையைத் தனது பிசினஸுக்கான ஐடியாவாக ரோவர் நிறுவனத்தின் சிஇஓ ஆரோன் செயல்படுத்த ஆரம்பித்தார். 

இந்த நிறுவனத்தின் மூலம் பிராணிகளுக்கான இடமளிப்பது, கவனித்துக்கொள்வது, அவற்றைப் பராமரிப்பது வாக்கிங் அழைத்துச் செல்வது இப்படி பல சேவைகளை வழங்கத் திட்டமிட்டார். இதற்காக நிதித்திரட்டுவதில் ஈடுபட்டபோது அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்தப் பிராணிகள் கவனிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு ஸ்பார்க் கேபிட்டல், மென்லோ வென்சர்ஸ், ஃபவுண்ட்ரி குரூப் மற்றும் டெக்னாலஜி கிராஸ்ஓவர் வென்சர்ஸ் ஆகிய ஃபண்டிங் நிறுவனங்கள் இதுவரை ரூ.418 கோடி (65 மில்லியன் டாலர்) நிதியை வழங்கியுள்ளன. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close