Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அமெரிக்காவுடன் விசா பிரச்னை குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்' - நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவிலுள்ள ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிய வழங்கப்படும் ஹெச்1 பி விசா குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வரும் நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

அவர், 'அமெரிக்கா எடுத்திருக்கும் விசா குறித்த நிலைபாட்டில் பெரிதாக எந்தவித மாற்றத்தையும் இதுவரை கொண்டு வரவில்லை. இதில் ஹெச் 1 பி விசா தொடர்பாக அவர்கள் எடுத்திருக்கும் கொள்கை முடிவும் அடங்கும். இதுவரை நடந்த இரு நாட்டுக்கு இடையிலான பல்வேறு சந்திப்புகளின்போதும் இந்த விசா பிரச்னை குறித்து அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம். ஆனால், அமெரிக்கா இதுவரை எந்தவித மாற்றத்தையும் முன்னெடுக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ஐ.டி துறை, நாட்டின் ஜிடிபி-யில் 9.3 சதவிகிதத்துக்குப் பங்களிக்கிறது. அதில் கிட்டத்தட்ட 37 லட்சம் பேர் நேரடியாக வேலை செய்கின்றனர். அந்தத் துறையில் 62 சதவிகிதம் ஏற்றுமதி அமெரிக்காவை நம்பித்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல விஷயங்களில் இந்திய ஐ.டி துறை அமெரிக்காவை நம்பியுள்ளதால்தான், ஹெச் 1 பி விசாவில் அமெரிக்கா சமீபத்தில் கொண்டுவந்திருக்கிற மாற்றம் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் இந்திய ஐ.டி துறையினரிடையே ஏற்படுத்தியுள்ளது.   

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close