Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டி பிரபலமான பெண் எம்பி பதவி இழப்பு

லாரிஸ்சா வாட்டர்ஸ்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டி பிரபலமான பெண் எம்பி. லாரிஸ்சா வாட்டர்ஸ் பதவி இழந்துள்ளார்.

எம்பி-யாக இருந்த லாரிஸ்சா வாட்டர்ஸ், நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்குப் பால் ஊட்டியவர். இவர், இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசியல் சட்டப்படி இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் எம்பி-யாகப் பதவி வகிக்க முடியாது. எனவே, லாரிஸ்சா வாட்டர்ஸ் பதவி இழந்துள்ளார்.

இவர், 11 மாதக் குழந்தையாக இருந்தபோது கனடாவை விட்டு ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். எனவே, அவர் கனடா நாட்டு குடியுரிமையும் பெற்றுள்ளார். இதனால் அவர் பதவி இழக்க நேர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த ஸ்காட் லுத்லாம் என்ற எம்பி-யும் இரட்டைக் குடியுரிமை சர்ச்சையால் சமீபத்தில் பதவி இழந்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close