Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப்-புதின் மீண்டும் சந்திப்பா..? வெடிக்கிறது சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஜி-20 மாநாட்டின்போது ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர் என்கிற தகவல் சர்ச்சையை அதிகரித்துள்ளது.

ட்ரம்ப்- புதின்

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், ரஷ்ய அதிபர் புதினின் தலையீடு இருந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின்மீது விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபரும் ரஷ்ய அதிபரும் ரகசியமாகச் சந்தித்துக்கொண்டனர் என்கிற தகவல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜெர்மனியில் ஜி-20 மாநாடு நடைபெற்றபோது, அதிகாரபூர்வமாக ட்ரம்ப்பும் புதினும் அலுவல்ரீதியாக சந்தித்துக்கொண்டனர்.

இந்நிலையில், அடுத்து இரண்டாவது முறையாக ட்ரம்ப்பும் புதினும் ரகசியமாகச் சந்தித்துக்கொண்டனர் என்ற தகவல் பரவியது. இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ட்ரம்ப்- புதின் இரண்டாவது முறையாக சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பு அலுவல் ரீதியானதாக இல்லாமல் மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு ஆகும். இது ரகசிய சந்திப்பு இல்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் எதுகுறித்து விவாதித்தார்கள், எவ்வளவு நேரம் விவாதித்தார்கள் என்பது குறித்தத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close