Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி ஜஸ்டின் பீபர் சீனாவில் பாட முடியாது!

பிரபல பாப் ஸ்டார் ஜஸ்டின் பீபர், சீனாவில் பாடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 

பீபர்

பீபர், மேடையிலோ அல்லது வேறு இடத்திலோ பாடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சீனா. இந்த திடீர் தடை உத்தரவு குறித்து சீன அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜஸ்டின் பீபர் மிகவும் திறமைமிக்க பாடகர். இருப்பினும் அவர் சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் நபரும் ஆவார். எங்களைப் பொறுத்த வரையில் அவர் தொடர்ச்சியாக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிகிறது. அவர் முன்னர், சீனாவுக்கு வந்த போதும் மோசமான நடத்தையை வெளிப்படுத்தினார். எனவே அவர் சீனாவில் பாடுவதிலிருந்து தடை செய்கிறோம். அவரின் நடத்தையை மாற்றிக் கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளது. 

கடந்த 2015- ஆம் ஆண்டு நடந்த 'பிலீவ் டூர்' என்ற நிகழ்ச்சியின் போதுதான் கடைசியாக பீபர் சீனாவில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பீபர், 'பர்பஸ் வேர்ல்டு டூர்' என்ற நிகழ்ச்சியையொட்டி இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங் காங் போன்ற இடங்களுக்குச் சென்று பாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பீபருக்கு சொன்னது போல காரணங்களைச் சொல்லி இதற்கு முன்னரும் சீன அரசு பல பாப் பாடகர்களை, நிகழ்ச்சி நடத்துவதிலிருந்து தடை செய்திருக்கிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close