Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதில் கத்தாருக்கு தொடர்பு?

தீவிரவாதத்துக்கு துணைபோவதாகக் கூறி, வளைகுடாவைச் சேர்ந்த ஐந்து நாடுகள் கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறித்துள்ளன. இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி, நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதில் கத்தாருக்குத் தொடர்புள்ளதாக  டாகுமென்ட்ரி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது. அதிர்வை  ஏற்படுத்தியுள்ள  "Qatar... The Road to Manhattan," என்ற அந்த டாகுமென்ட்ரியில், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட காலீத் ஷேக் முகமதுவுக்கு கத்தார் தொடர்ந்து ஆதரவளித்து, நிதியுதவி செய்துவந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு

1999-ம் ஆண்டு, அமெரிக்க புலனாய்வுப் படை தோஹாவில் காலீத்தை கைதுசெய்ய முயன்றதாகவும், கத்தார் அமைச்சர் அப்துல்லா பின் காலீத் அல்தானி, அவரை ரகசியமாக தப்பச் செய்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் தப்பிய காலீத், வகுத்த திட்டத்தால், 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி மன்ஹட்டன் இரட்டைக்கோபுரங்கள், விமானம் மோதி தகர்க்கப்பட்டன. அல்குவைதா தலைவர் பின்லேடனுக்கும் அமைச்சர் அல்தானிக்குமே தொடர்பு இருந்துள்ளது.

அல்குவைதா தலைவர் காலீத்

அமெரிக்க புலனாய்வுப் படை, தோஹாவில் வைத்து காலீத்தை கைதுசெய்ய முயன்றபோது, இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையே நடந்த உரையாடல்கள்கூட, டாக்குமென்ட்ரியில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ, மற்றும் தேசியப் புலனாய்வு முகமை என அழைக்கப்படும் என்.எஸ்.ஏ அதிகாரிகள் பேட்டியும் டாக்குமென்ட்ரியில் இடம்பெற்றுள்ளது. 

பாகிஸ்தானைச் சேர்ந்த காலீத், அல்குவைதா இயக்கத்தின் முக்கியத் தலைவர். 2003-ம் ஆண்டு, ராவல்பிண்டியில் வைத்து சி.ஐ.ஏ இவரை கைதுசெய்தது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close