Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாமானியர்களின் அறிவியல் ஆசிரியர் ’யாஷ் பால்’ காலமானார்!

பிரபல விஞ்ஞானியும் கல்வியாளருமான முனைவர் யாஷ் பால் உத்தரப்பிரதேசத்தில் மறைந்தார். அவருக்கு வயது 90. யாஷ் பால் காஸ்மிக் கதிர்களைப் பற்றியும், பேராற்றல் சக்தியின் இயற்பியல் பற்றியும் பல்வேறு ஆய்வுகளைச் செய்தவர். அவரது ஆய்வுகளுக்காக சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாது, அவர் 1976 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும், 2013ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருதும் பெற்றவர். 

yash pal
 

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ‘டர்னிங் பாயின்ட்’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு எளிய முறையில் அறிவியல் பாடங்களைக் கற்றுத் தந்தவர் யாஷ் பால். ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதும் பல பார்வையாளர்கள் இருந்தனர். 

யாஷ் பால் அவர்கள் இந்திய இயற்பியல் துறையின் தலைவராக பணியாற்றியவர். 2007 முதல் 2012 வரை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.  ’முதல் அறிவியல் ஆசிரியர்’ என்று யாஷ் பாலை குறிப்பிட்டு  சமூக வலைதளங்களில் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அறிவியலுக்கும் கல்விக்கும் யாஷ் பால் அவர்களின் பங்கு மகத்தானது! 

-இல்யாஸ் ர.முகமது

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close