Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் அதிகம் நேசிக்கப்படும் அரசியல்வாதி யார்..? ஆராய்ந்த அமெரிக்க நாளிதழ்

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ’வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, இந்தியாவில் அதிகம் பேரால் நேசிக்கப்படும் அரசியல்வாதிகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

சுஷ்மா ஸ்வராஜ்

அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி குறித்து ’வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற நாளிதழ் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் இந்தியாவில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதியாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வாரஜை அறிவித்து கெளவுரவித்துள்ளது. இந்த ஆய்வு குறித்து அந்நாளிதழில் வெளியான கட்டுரையில் ’இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படுகிறார்’ எனக் கெளவுரவித்துள்ளது.

மேலும் அந்தக் கட்டுரையில், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஏற்படும் அத்தனை பிரச்னைகளுக்கும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளம் மூலமாகவே புகார் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். ட்விட்டர் சேவையைப் பயன்படுத்தும் வெளியுறவுத் துறை அமைச்சர்களில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (@SushmaSwaraj ) அதிக ஃபாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close