Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை': ட்ரம்ப்பின் முடிவுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

'அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை' என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப்


அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிர்ச்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார், ட்ரம்ப்.  ஏழு இஸ்லாமிய நாடுகள் மீதான தடை, ஒபாமாவின் சுகாதாரத் திட்டம் ரத்து, ஹெச் 1 பி விசாவில் கட்டுப்பாடு என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை என்று அறிவித்துள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளைச் சேர்க்கும் திட்டத்தை, முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற உடனேயே, ராணுவத்தில் திருநங்கைகள் சேர்வதை ஒத்திவைத்தார். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு இடமே இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


இது குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகு, ராணுவத்தில் திருநங்கைகளைப் பணிபுரிய அரசு அனுமதிக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நமது ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும். திருநங்கைகளால், ராணுவத்தில் ஏற்படும்  மருத்துவச் செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்காது. நன்றி" என்று கூறியுள்ளார்.


ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்களும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுவருகிறது. ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "எல்லாராலும் நாட்டுக்கு சேவை செய்ய முடியும். அவர்கள் யார் என்பது முக்கியமல்ல" என்று பதிவுசெய்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close