Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் நீக்கம்: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி

பனாமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில், அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நவாஸ் ஷெரீப்

உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்  பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது.


நவாஸ் ஷெரீப் மட்டுமல்லாமல், அவரின் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின்போது கடந்த மே மாதம் ‘கூட்டு விசாரணைக் குழு’ ஒன்று நீதிமன்றத்தால் விசாரணைக்காக உருவாக்கப்பட்டது.  இந்தக் கூட்டு விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இன்று இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது க்ரிமினல் வழக்கு பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, விசாரணையை ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் நடத்தும் என்றும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close