Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்க்கும் வேட்பாளர் இவர்தான்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜான் திலேனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜான் திலேனி

அடுத்த அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வருகிற 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜான் திலேனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தத் தேர்தலுக்கு இன்னும் சுமார் மூன்றாண்டு காலம் இருக்கும் நிலையில் ஜனநாயகக் கட்சி தனது அடுத்த அதிபர் வேட்பாளரை அறிவித்துள்ளது. 

2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். வரும் தேர்தலில் ட்ரம்ப்புக்கு எதிராக ஜான் திலேனி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜான் திலேனி அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண பிரதிநிதிகள் சபை உறுப்பினராக உள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜான் திலேனி கூறுகையில், ‘அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆட்சியில் வளர்ச்சியும் இல்லை, மக்களுக்குப் பாதுகாப்பும் இல்லை’ எனக் காட்டமாகக் கூறினார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close