Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இனி பேச்சுக்கு இடமில்லை...!'- அமெரிக்காவின் இறுதி முடிவு

அமெரிக்கா - வட கொரியா இடையில் பிரச்னை உச்சத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி, 'வட கொரியா விஷயத்தில் இனி பேச்சுக்கு இடமில்லை' என்று திடுக் கருத்தைக் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்தது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா. இந்நிலையில், கடந்த வாரம் மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனையை அமெரிக்காவை நோக்கி சோதித்துள்ளது வடகொரியா. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தன.

இப்படி இரு நாடுகளுக்கு இடையில் இருக்கும் சச்சரவு உச்சத்தில் இருக்கும் நிலையில் ஹேலி, 'வட கொரியா விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுவது எந்தவிதப் பயனும் அளிக்காது. எனவே, அவர்களுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை' என்று எச்சரித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close