Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடா? தீவிரமாகும் விசாரணை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டுவரும் நிலையில், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது.

ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (68) மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (70) ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் வரையில் வெளியான அத்தனை கருத்துக்கணிப்புகளும் ஹிலாரிக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. ஆனால், பலரும் எதிர்பாரா வகையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாகத் தேர்தல் பிரசாரத்தின்போதே எதிர்க்கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் புகார் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகப் பரவலாக சந்தேகங்கள் கிளம்பின. 

இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையை முன்னாள் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் ராபர்ட் முல்லர் ஏற்று நடத்திவந்தார். நேர்மையும் கண்டிப்பும் மிக்க அதிகாரி என்று பெயர்பெற்ற ராபர்ட் முல்லர் விசாரணையைத் தொடங்கிய போது, பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். தற்போது இந்த விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில் ‘தி கிராண்ட் ஜூரி’ என்றழைக்கப்படும் பெருநடுவர் குழு, விசாரணைக்குழுவுடன் இணைந்துள்ளது. இந்தக் குழு, தொடக்கத்திலிருந்து இவ்விவகாரம் தொடர்பான முழு விசாரணையையும் ரகசியமாக மேற்கொள்ளும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close