Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் அமைச்சரவையில் முதல் இந்து அமைச்சர்! 

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமரான ஷாகித் அப்பாஸி தலைமையிலான அமைச்சரவையில் இந்து மதத்தைச் சேர்ந்த தர்ஷன் லால் இடம்பெற்றுள்ளார். 

dharshan

பனாமா ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய பிரதமராக நவாஸின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினராகாமல் பிரதமராகப் பதவியேற்க முடியாது  என்பதால், இடைக்காலப் பிரதமராக ஷாகித் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஷாகித் அப்பாஸி தலைமையிலான 47 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை நேற்று பதவியேற்றுக்கொண்டது. இதில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த தர்ஷன் லாலும் ஒருவர். நவாஸ் ஷெரீப்-பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இரண்டாவது முறையாக எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்ஷன் லால், மருத்துவராகப் பணியாற்றி வருபவர். இதன்மூலம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சரவையில் இடம்பெறும் இந்து மதத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பாகிஸ்தானின் 4 மாகாணங்களை ஒருங்கிணைக்கும் அமைச்சர் அந்தஸ்திலான பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு பொதுத்தேர்தலைக் கணக்கில் கொண்டு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரு மடங்காக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close