Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகை உலுக்கிய ஹிரோஷிமா குண்டுவெடிப்பு: ஜப்பானில் நினைவு தினம் அனுசரிப்பு!

ஆகஸ்ட் 6, 1945, இந்த உலகமே மறக்க முடியாதபடி, உலகின் முதல் அணுகுண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகர்மீது வீசப்பட்ட நாள். பின்னர் ஆகஸ்ட் 9, 1945 அன்று நாகசாகிமீது வீசப்பட்டது இரண்டாவது அணுகுண்டு. இதுநாள் வரையில் இதன் தாக்கங்களைச் சுமந்து கொண்டிருக்கும் ஜப்பான், இன்று ஹிரோஷிமா குண்டுவெடிப்பின் 72-வது நினைவு நாளை அனுசரித்து வருகிறது.

ஹிரோஷிமா

இரண்டாம் உலகப் போரின் காரணமாக ஜப்பான், அமெரிக்காவின் முத்து துறைமுகத்தைத்  தாக்கவே அதற்குப் பதிலடி கொடுக்க விரும்பியது அமெரிக்கா. அதற்காக ஜப்பான்மீது குண்டு வீசுவதற்கான இறுதி உத்தரவு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. ஹிரோஷிமா, கோகுரா, நாகசாகி மூன்று நகரங்களும் இறுதி இலக்குகளாக முடிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு (ஜப்பான் நேரம்) அணுகுண்டைச் சுமந்துகொண்டு 'எனோலா கே’ என்ற பி-29 ரக விமானம் புறப்பட்டது. 'லிட்டில் பாய்’ என்ற அந்த குண்டு, இன்று வரை உலகம் பார்த்த மிக மோசமான பேரழிவை ஹிரோஷிமாமீது கட்டவிழ்த்தது. இத்தாக்குதல் பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து இன்று வரையில் அதன் ரணங்களை விரவச்செய்து வருகிறது.

குண்டுவீச்சு தாக்குதல் நடந்த 72-வது நினைவு தினம் ஜப்பானிலுள்ள அமைதிப் பூங்காவில் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த அஞ்சலிக் கூட்டத்தில் ‘உலகில் அமைதி நிலவ, அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும். இதற்கான இயக்கத்தை தலைமையேற்று வழிநடத்தவும் ஜப்பான் தயாராக உள்ளது’ என அறிவிக்கப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close