Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க குட்டிநாடு குவாமை குறி வைக்கும் வடகொரியா!

டகொரிய ராணுவம் தொடர்ந்து அணுஆயுத ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.  கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாகவும் அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை தங்களுக்கு இருப்பதாகவும் அண்மையில் வடகொரியா அறிவித்தது.  ''அமெரிக்காவை அச்சுறுத்தும் செயல்களில் வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் இந்த உலகமே கண்டிராத வகையில் அழிவை சந்திக்க நேரிடும்'' என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். 
 

குவாமில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம்

அமெரிக்காவின் எச்சரிக்கையை மதிக்காத வடகொரியா, 'அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருக்கும் பசிபிக் கடலில் உள்ள குட்டி நாடான  குவாமை தாக்கத் திட்டமிட்டுள்ளது.  வடகொரிய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாக வடகொரிய அரசின் கே.சி.என்.ஏ ஏஜன்ஸி வெளியிட்டுள்ள செய்தியில், ''அதிபர் கிங் ஜாங் உத்தரவிட்டால் குவாம் எந்த நேரத்திலும் தாக்கப்படும்'' எனக் கூறியுள்ளது.

வடகொரியா தாக்கத் திட்டமிட்டுள்ள குவாம்

குவாம் நாட்டில் ஏராளமான அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன. 6 ஆயிரம் அமெரிக்கத் துருப்புகள் உள்ளன. அங்குள்ள, ஆன்டர்ஸன் விமானப்படைத் தளத்தில் அணுஆயுதங்களை ஏவும் திறன் படைத்த B 52 ரக விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க கடற்படைத்தளமும் இருக்கிறது. ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வசிக்கும் சிறிய தீவான குவாம் வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து 3,400 கி.மீ தொலைவில் உள்ளது. கடந்த 1898-ம் ஆண்டு ஸ்பெயினிடம் இருந்து அமெரிக்கா இந்த தீவை கைப்பற்றியது. குவாமை சிறிது காலம் ஜப்பான் ஆண்டது. 1944-ம் ஆண்டு குவாம் மீண்டும் அமெரிக்கா வசம் வந்தது.

ஒரு குவாமியர் பிறப்பால் அமெரிக்கர்தான். அதனால் முதலில் குவாமைத் தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close