Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்சிலோனா தாக்குதல்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

பார்சிலோனா தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியைச் சுட்டுக்கொலை செய்துவிட்டதாக அம்மாநகர போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பார்சிலோனா தாக்குதல்

பார்சிலோனாவின் சுற்றுலாப் பகுதியான லாஸ் ராம்பிளாஸ் பகுதியில்தான் நேற்று கார் மோதியதில் விபத்து நடந்துள்ளது. மக்கள் அதிகம் புழங்கும் இந்தப் பகுதியில், யாரும் எதிர்பாராத விதத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று மக்கள் நடக்கும் இடத்தில் பாய்ந்தது. 13 பேர் பலியான இந்தச் சம்பவத்தால், ஐரோப்பா அளவில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. இந்த விபத்து, தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பார்சிலோனா போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த விபத்து தீவிரவாதத் தாக்குதல் என்றும் அதில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவனின் புகைப்படமும் போலீஸாரால் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பார்சிலோனாவின் காம்ப்ரில்ஸ் என்னும் பகுதியில் தங்கியிருந்த தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலின் முடிவில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இத்தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகளின் புகைப்படங்களையும் தற்போது பார்சிலோனா போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close