Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்!

'தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

டொனால்ட் ட்ரம்ப்


அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சிமூலம் உரையாற்றிய அவர், தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்தும் பேசினார். அப்போது பேசிய ட்ரம்ப், ''தீவிரவாத இயங்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள்குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால், பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும். ஆனால், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதால், அந்நாடு பெரிய இழப்புகளைச் சந்தித்துவருகிறது. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. இந்தநிலை உடனடியாக மாற வேண்டும். இல்லையென்றால், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி வரும். உள்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து அமைதிப் பாதைக்கு பாகிஸ்தான் திரும்பவேண்டிய நேரம் இது’ என்று பேசினார். இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா விரும்புவதாகக் கூறிய ட்ரம்ப், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தானை பொருளாதாரரீதியில் உயர்த்த இந்தியா உதவ வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார்.    
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close