Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருத்தத்தில் 'சக்திமான்' சீரியல் நடிகர்!

நடிகர் மற்றும் இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் குழுத்தலைவர் முகேஷ் கண்ணா. இவர் 'சக்‌திமான்'  சீரியல் மூலமாக நன்கு அறியப்பட்டவர். தற்போது குழந்தைகளுக்கான படங்கள் பெருமளவு வெளிவருவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசும் பொழுது, குழந்தைகளுக்கான முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. அப்படி வெளிவரும் படங்கள் விழாக்கள் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் வெளியாவதால் குழந்தைகள் அதை பார்க்கத் தியேட்டருக்கு அழைத்துப் போகப்படுவதில்லை. 

இதனால் குழந்தைகளுக்கான நல்ல படங்கள் வந்தாலும் அவர்கள் அப்படங்களை பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. தற்போது அவர் நடித்து வரும் Chidiakhana எனும் படம் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான விளையாட்டு தொடர்பான கதைக்கருவை கொண்டது. நிச்சயம் குழந்தைகள் இதை விரும்புவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த படத்தில் ஃபுட்பால், பேஸ்கெட் பால், ஹாக்கி போன்ற விளையாட்டுக்களை அடிப்படையாக வைத்தே இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகிறது' என்றார்.  
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ