முன்னோருக்குத் தர்ப்பணம்... மரத்துக்கு வந்தனம்... திருவிழா 'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், நாட்டு நலம் காப்போம்’, 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்றெல்லாம் மரம் வளர்ப்பின் அவசியத்தை வீதியில் நின்று கூவினாலும், செவி மடுப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமே! இத்தகையச் சூழலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், அமாவாசை தினத்தன்று பல ஆயிரம் மரங்களை நடவு செய்து வருவதை ஒரு வழக்கமாகவே கடைபிடித்து வருகிறார்கள்... கன்னியாகுமரி மாவட்ட மக்கள். ஒவ்வொரு ஆண்டும் குழித்துறை பகுதியில் நடக்கும் 'வாவு பலி' பொருள்காட்சியின் போதுதான் இந்த ஆக்கப்பூர்வமான பணி அரங்கேறி வருகிறது! அதென்ன வாவு பலி? 'தர்ப்பணம்' என்பதைத்தான் மலையாளத்தில் 'வாவு பலி’ என்கிறார்கள். இறந்து போன முன்னோர்களுக்காக ஆடி அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வது வழக்கம். அன்றைய தினத்தில், ஏதாவது ஒரு நீர்நிலையில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பார்கள். அதையே, கொஞ்சம் வித்தியாசமாக செய்கிறார்கள், இந்த மாவட்ட மக்கள். குழித்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, இறந்தவர்களின். . .
COMMENT(S): 1
கீரை விதைகல் தேவை 9750499928