பீட்ஸா தயாரிக்கும் பல்கலைக்கழகமே... சிறுதானியங்களைத் திரும்பிப் பார் !
பீட்ஸா தயாரிக்கும் பல்கலைக்கழகமே... சிறுதானியங்களைத் திரும்பிப் பார் !கூட்டம் காவிரி நீர் கிடைக்காததால், இந்த ஆண்டு, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. சம்பா சாகுபடியும் சந்தேகத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பசுமை கட்டியிருக்க வேண்டிய நிலங்கள் எல்லாம் பாளம் பாளமாகப் பெயர்ந்து தரிசாகக் காட்சி அளிக்கின்றன. காவிரி நீரைப் போராடிப் பெறுவது ஒருபுறம் இருந்தாலும்... இத்தகைய நெருக்கடியானச் சூழலில், விவசாயிகள் தங்களை ஓரளவுக்காவது தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? என்பதுதான், தற்போது அனைத்துத் தரப்பினரும் எழுப்பும் கேள்வியாக உள்ளது. இந்தக் கேள்விக்கு விடை தரும்விதமாக, புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டி கிராமத்தில் உள்ள கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணையில் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி, 'சிறுதானிய மாநாடு’ நடைபெற்றது! 'குடும்பம்' அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், குடும்பம் அமைப்பின் இயக்குநர் ஆஸ்வால்டு குவிண்டால், நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர். . .
சிறு தானிய உணவு வகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மேற்கத்திய உணவு வகைகள் தற்போது வந்தது, ஆனால் சிறு தானிய உணவு கொள்முதல் பலகாலமாக தொடர்ந்து சிறுக சிறுக புறகணிக்கப்பட்டு வந்துள்ளது, இதன் மூலக்காரணம் அறிந்து, அதற்கேற்ப மக்களை கவரும் வகை அறிந்து அவைகளை கொண்டு சேர்க்க வேண்டும். முதலில் நம் நாட்டு செஃப்கள் நல்ல ருசியான உணவு வகைகள் ஆராய்ந்து அதை பிரபலப்படுத்த வேண்டும்.
COMMENT(S): 1