ஏற்றம் தரும் இயற்கை எள்...! ஆமணக்கு, நிலக்கடலை, சூரியகாந்தி... என ஏகப்பட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் இருந்தாலும், அதிகப் பராமரிப்பு இல்லாமல் குறைந்த செலவிலேயே நல்ல வருவாய் தருவது... எள் சாகுபடிதான். அதனால்தான் பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து எள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவராக, இயற்கை முறையிலேயே பல ஆண்டுகளாக எள் சாகுபடி செய்து வருகிறார்... நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி. எள்ளுச் செடிகள் தளதளவென வளர்ந்து நிற்கும் வயல்காட்டில் நின்றபடி நம்மிடம் பேசிய பரமேஸ்வரி, ''எங்களுக்கு மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. நாலு ஏக்கர்ல கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் இருக்கு. ஒரு ஏக்கர்ல நிலக்கடலை, எள்ளு இது ரெண்டையும் போடுவோம். இதுலயே ஊடுபயிரா ஆமணக்கு போடுவோம். தோட்டத்துல விசைத்தறி போட்டிருக்கோம். தறி... வீட்டுக்காரர் பொறுப்பு. விவசாயம்... என் பொறுப்பு. இயற்கை முறையில இப்ப (வைகாசிப் பட்டம்) ஒரு ஏக்கர்ல எள் சாகுபடி செஞ்சுருக்கோம். 'பசுமை. . .
COMMENT(S):