சிறிய பரப்பு...அதிக மரங்கள்... ''சின்ன பரப்புல அதிகமான மரங்கள் வளர்த்தா, அதுங்களோட வளர்ச்சி சிறப்பா இருக்காதுனு சொல்லுவாங்க. ஆனா, என் நிலத்துல இந்த கருத்து பொய்யாகிடுச்சு. குறுகிய காலத்துலயே, எல்லா மரங்களுமே நல்ல செழிப்பா வளர்ந்திருக்கு'' என சிலாகிக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்! தஞ்சாவூரில் புத்தக நிலையம் மற்றும் மருந்துக் கடை நடத்தி வரும் பட்டதாரியான சக்திவேல்... கூடவே விவசாயத்தையும் விடாது தொடர்கிறார். பகல் பொழுதொன்றில் தோட்டம் தேடிச் சென்றோம். இரண்டு வயதே உள்ள மகோகனி, குமிழ்தேக்கு, வேங்கை, செஞ்சந்தனம், ரோஸ்வுட், முள்ளில்லா மூங்கில் உள்ளிட்ட மரங்கள் வளமாக வளர்ந்து நிற்க... தோட்டத்தைச் சுற்றிலும் தென்னை, பனை, பூவரசு, வேம்பு, சிசு மரங்களும் அலங்கரித்து நின்ற காட்சியைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தோம். வேலியில் காய்க்குது வாழை ! ''ரெண்டு வருஷத்துக்கு முன்ன வரை நெல் சாகுபடி செய்த நிலம்தான் இது. இப்ப செழிப்பான தோட்டமா காட்சி அளிக்கறதுக்கு காரணமே.... . .
COMMENT(S): 2
அறிவுபூர்வமாக விவசாயம் செய்கிறார் திரு.சக்திவேல்...
மரங்களுக்கிடையேயான இடைவெளிக்காக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குப் பின்னர், அவற்றை வெட்டி விற்பது என்பது மிக நல்ல யுக்தி...
அருமை.