கட் ஆகும் கரன்ட்...ஃப்யூஸ் ஆகும் விவசாயம் ! பிரச்னை உலக வரைபடத்தில் இருப்பது ஓர் இந்தியா. ஆனால்... உள்ளுக்குள், பணக்கார இந்தியா, ஏழை இந்தியா என இரண்டு இந்தியா இருக்கிறது என்பதுதான் உண்மை. அதேபோல, தமிழகத்தில் இரண்டு பிரிவுகளை உருவாக்கியுள்ளது தமிழக மின்வாரியம். ஆம்... நகர் மின் வழங்கல் தொகுப்பு (Urban feeder)( என்கிற பெயரில் சென்னைக்கு மட்டும் 24 மணி நேர மின்சாரத்தைக் கொடுக்கும் இந்தத் துறை, கிராம மின்வழங்கல் தொகுப்பு (Rural feeder) என்கிற பெயரில் தமிழகத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் நாளன்றுக்கு 6 மணி நேரம்கூட மின்சாரம் கொடுப்பதில்லை! 'காற்றாலை மின்சாரம் குறைந்துவிட்டது... நீர் மின்சாரத்துக்கும் வழியில்லை... அதனால்தான் இந்தப் பிரச்னை' என்று சொல்லிக் கொண்டே, தாறுமாறாக மின்வெட்டுத் தாக்குதல் கிராமப்புறங்களின் மீது நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறப்பதற்கு மக்களின் மனநிலையை மாற்றவேண்டும் என்பதற்காக, கூடுதல் மின்வெட்டுத் தாக்குதலும் நடத்தப்படுவதாக ஆங்காங்கே குமுறல்கள் கேட்கின்றன. இந்த மின். . .
COMMENT(S): 5
கடைசி நெல் மனி காலி ஆனாலும் கூட தமிழகம் திருந்தாது
கடைசி நெல் மனியும் காலி ஆனால் தான் விவசாயின் மகிமை தெரியும்
Duration of power supply to be intimated to farmers in advance.
கிராம மக்களுக்காக குரல் கொடுத்தமைக்கு நன்றி. நீதிமன்றமும் அரசாங்கமும் செவி சாய்க்கும!?...
நிஜம் சுடுகிறதோ ஒரு வாசகர் கருத்தைகூட காணோம்...ஆண்டவா....