பாதுகாப்பான உணவுக்கு ஒரு கண்காட்சி... ''இயற்கை உணவுகள் பற்றிய விழிப்பு உணர்வு, மக்களிடம் சென்றடைந்தாக வேண்டும். எங்களைப் போல பரவலாகத் தெரிந்த முகங்கள் வந்து சொன்னால்... மற்றவர்கள் நிச்சயமாக நின்று கேட்பார்கள். அதனால்தான், இந்த விஷயத்தை நாங்கள் கையில் எடுத்து பரப்ப முன் வந்திருக்கிறோம்'' -இயற்கை உணவு பற்றி இப்படி ஆர்வமாக சொல்பவர்... பிரபல திரைப்பட நடிகை ரோகிணி. சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, பெயரில்லாத பூங்காவில் ('செம்மொழிப் பூங்கா' என்கிற பெயரை மூடி மறைத்து வைத்திருக்கிறார்கள்) கடந்த 24-ம் தேதி 'பாதுகாப்பான உணவுப் பொருள்கள் குறித்த விழிப்பு உணர்வுக் கண்காட்சி’ நடைபெற்றது. அங்கேதான் இப்படி தன்னுடைய ஆர்வத்தை எடுத்து வைத்தார் ரோகிணி. இவர் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் மட்டுமல்ல.... நாசர், பசுபதி உள்ளிட்ட நடிகர்கள், சினிமா இயக்குநர் வஸந்த், எழுத்தாளர் ஞாநி... என பசுமை மீது ஆர்வம் கொண்ட பிரபலங்களும் இந்த அமைப்பில் உறுப்பினர்கள் என்பது பாராட்டுதலுக்குரிய. . .
COMMENT(S): 2
www.indiaforsafefood.in
இந்த இணைப்பு வேலை செய்யவில்லை... www இல்லாமல் indiaforsafefood.in மட்டும் போட்டால்தான் வேலை செய்கின்றது. கவனிக்கவும்.
useful article..