இனிக்குது இடைப்பருவ பலா...கலக்குது கல்கட்டாத புடலை! ஆராய்ச்சி தண்ணீர், வேலையாட்கள், விலையின்மை ஆகிய பிரச்னைகள் ஒருபுறமிருக்க, போலி விதைகள்... தரமற்ற நாற்றுகள்... போன்றவை இன்னொருப் பக்கம் விவசாயிகளை சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இன்னல்களில் இருந்து, விவசாயிகளை மீட்கும் வகையில், அதிக மகசூல் கொடுக்கும் தரமான காய்கறி ரகங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி வருகிறது, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில், பாலூர் கிராமத்தில் அமைந்திருக்கும் காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம்! கோயம்புத்தூர், தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த நிலையத்தைக் காண, காலைப் பொழுதொன்றில் போய்ச்சேர்ந்தோம். அன்புடன் வரவேற்ற ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் கலைமணி, உற்சாகம் பொங்க நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி பேச ஆரம்பித்தார். ''1905-ம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி நிலையமாகத்தான் இது துவங்கப்பட்டது. பிறகு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, 89-ம் ஆண்டு முதல் காய்கறி ஆராய்ச்சி நிலையமாக செயல்பட்டு வருகிறது. நிலையத்துக்குச் சொந்தமான 55 ஏக்கர் நிலத்தில் மா,. . .
congratulations Dr. Kalaimani.Being the part in research of P.LR 1Brinjal And PLR1jack and initiating the research on PLR1 chilliesI am very happy to see the growth of Palur Station.I take the pride that Iwas the past Head of the station. Keepit up.Our Station should serve better for the farmers.
இந்த இடம் மற்றும் திண்டிவனம் அருகே உள்ள எண்ணை விதை ஆராய்ச்சி பண்ணை ஆகியவற்றை அங்கிருக்கும் மாவட்டதாரர்களே சரி வர உபயோகித்து பயன் அடைவதில்லை. இதற்க்கு காரணம் இம்மாவட்டங்கள் இரண்டு ஜாதிக்கட்சியினரிடம் மற்றும் அவர்களின் மெத்தனப்போக்கிற்கும் அடிமையாகிவிட்டது தான்.
COMMENT(S): 2

Prof.S.Balasubramanyan.(Retd)