நீங்கள் கேட்டவை புறா பாண்டி ''நர்சரி பண்ணை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அத்தொழிலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். இதற்கு அரசு அனுமதி பெற வேண்டுமா?'' எம். பானுமதி, சிவகாசி. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் மூன்று தலைமுறைகளாக நர்சரி நடத்தி வரும் முனைவர். ரா. பிரபுராம் பதில் சொல்கிறார். ''தற்சமயம் நர்சரி தொழிலுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேநேரத்தில் புற்றீசல் போல உருவாகும் பல நர்சரிகள் காணாமல் போவதும் நடக்கிறது. சரியான புரிதல், திட்டமிடல் இல்லாததுதான் காரணம். பழச்செடி நர்சரி, மரப்பயிர் நர்சரி, காய்கறி நர்சரி என மூன்று வகை நர்சரிகள் உள்ளன. பழ மரங்கள் சாகுபடி அதிகமாக நடக்கும் பகுதிகளில் பழச்செடிகளுக்கான தேவை இருக்கும். சற்று வறட்சியான பகுதிகளில் மரக்கன்றுகளுக்கான தேவை இருக்கும். நல்ல செழிப்பான பகுதிகளில்... அதாவது, காய்கறிகள் விளையும் பகுதிகளில் அவற்றுக்கான தேவை இருக்கும். ஆகவே, அந்தந்தப் பகுதியின் தேவையைப் பொறுத்து, உரிய. . .
COMMENT(S):