ஊருக்காக வேண்டாம்... நமக்காக வேண்டும்... வீட்டுத் தோட்டம் 'அதிக இடம், செழிப்பான தண்ணீர், அதீத உடல் உழைப்பு... இவையெல்லாம் இருந்தால்தான் விவசாயம் சாத்தியம்' என்பது பெரும்பாலானவர்களின் நினைப்பு... நம்பிக்கை... எல்லாம்! ஆனால், 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்கிற வாக்கின்படி... கிடைக்கும் சிறுதுளி இடத்தில்கூட ஒரு செடியை நட்டு வைத்து, வளர்த்தெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரேமலதா... அவர்களில் ஒருவர்! வீட்டைச் சுற்றிலும், பசுமை கொஞ்சிக் கொண்டிருக்க... செடிகளுக்கு வாஞ்சையோடு தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்த பிரேமலதா, பெருமையோடு தன் வீட்டுத் தோட்டம் பற்றி நம்மிடம் பேச ஆரம்பித்துவிட்டார். ''மார்த்தாண்டம், நேசமணி நினைவு கிறிஸ்துவக் கல்லூரியில கணிப்பொறித் துறை பேராசிரியரா இருக்கேன். நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே கிராமம்தான். வீட்டைச் சுத்தியும்... கீரை, கிழங்குனு எதையாச்சும் விதைச்சு விவசாயம் பண்ணிட்டே இருப்பாங்க எங்கம்மா. அதையெல்லாம் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால... எனக்கும் விவசாயத்துல அதிக ஆர்வம். வீட்டுக்காரர், சர்ச்ல. . .
COMMENT(S): 3
நேர்த்தியாக அமைதிருக்கேரீர்கள் உங்கள் தோட்டத்தை. வாழ்த்துக்கள்
இது போல வீட்டுத்தோட்டங்கள் பற்றி தொடர்ந்து வெளியிடுங்கள்
அருமையா இருக்கு உங்கள் தோட்டம்.