வளர்ச்சியைக் கொடுத்த வளையங்கள்..!வரலாறு மீண்டும் படையெடுத்த நான்... திருக்காட்டுப்பள்ளி சர். சிவசாமி ஐயர் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தேன். அந்த ஆண்டில் மாட்டு வண்டியை விட்டுவிட்டு, சைக்கிளில் பயணிக்க ஆரம்பித்தேன். அதனால் எனக்கு படிக்க கூடுதல் நேரம் கிடைத்தது. கோயில் திருவிழாக்களையும் அரசியல் கூட்டங்களையும் தவிர்த்தேன்! ஒரு நாள் இரவு உணவுக்குப்பின் நான், கண்மூடி படுத்திருந்தபோது... வீட்டுக்கு வந்திருந்த ஒருவர், 'இவன் படிக்காமல் அதற்குள் படுத்து விட்டானா?’ என்று அக்காவிடம் கேட்க, அவளோ... 'அவன் ஜாதகத்தில் அதிகம் படிப்பு இல்லை என்று இருக்கிறது' என்று சொல்லி விட்டாள். இந்த வார்த்தைகள் எனக்குள் முள்ளைப் போல தைத்தன. 'இந்த ஆண்டு, தேர்வில் எப்படியும் வெற்றி பெற்று, கல்லூரியில் சேர்ந்தே ஆக வேண்டும்’ என்று வைராக்கியம் கொண்டேன். அதேபோல, நிறைய மதிப்பெண்களுடன் வெற்றியும் பெற்றேன். அடுத்ததாக, 'எந்தக் கல்லூரியில் சேர்வது?’ என்று கேள்வி வந்தது. அண்ணன்கள் திருச்சி கல்லூரியில் படித்தார்கள். அதனால், என்னை சிதம்பரம் கல்லூரிக்கு. . .
COMMENT(S):