மரத்தடி மாநாடு காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'ஏரோட்டி’ ஏகாம்பரம், மோட்டாரைப் போட்டுவிட்டு... வரப்பில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். வரப்போரத்து கல் திட்டில் அமர்ந்திருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, கண்களை மூடி வானொலியில் கசிந்த பழையப் பாடலை ரசித்துக் கொண்டிருந்தார். சற்றுநேரத்தில் வந்து சேர்ந்தார் 'காய்கறி’ கண்ணம்மா. உடனே, அறுத்தப் புல்லை உருட்டுக் கட்டாகக் கட்டி வைத்துவிட்டு, வரப்புக்கு வந்த ஏரோட்டி, ''எங்கிட்ட ஒரு நல்ல சேதி இருக்கு'' என்றபடி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார். ''அந்தியூர், குருநாதசுவாமி கோவில்ல வருஷா வருஷம் ஆடி மாசம் தேர் திருவிழா நடக்கும். அதையட்டி குதிரைச் சந்தையும் கூடும். இந்த வருஷம் ஆகஸ்ட் 8-ம் தேதியில இருந்து 11-ம்தேதி வரைக்கும், சந்தை நடந்துச்சு. குதிரைகளோட காங்கேயம் மாடுக, ஆலம்பாடி மாடுக, மலை மாடுகனு ஏகப்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வந்துருந்துச்சு. 1 லட்ச ரூபாய்ல இருந்து, பத்து லட்ச ரூபாய் வரைக்கும் குதிரைங்க விலை போச்சு. குதிரை வாங்க வர்றவங்க. . .
COMMENT(S):