மரத்தடி மாநாடு 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி மின்சாரக் கட்டணம் செலுத்திவிட்டு, கழனியை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார். விவசாயக் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வந்திருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம்... வழியில் வாத்தியாரைப் பார்த்தவுடன் குரல் கொடுக்க, இருவரும் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர். கொஞ்ச தூரத்திலேயே 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர்ந்து கொள்ள... அப்படியே ஆரம்பித்தது, அன்றைய மாநாடு. ''அதிக மகசூல் எடுக்குற முப்பத்தாறு விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து, ஊக்கப்பரிசு கொடுக்கணும்னு முதலமைச்சரம்மா சொல்லியிருக்காங்க. விவசாயத்தை மேம்படுத்துறதுக்காகத்தான் இந்தத் திட்டமாம். நீயும் போட்டியில கலந்துக்க வேண்டியதுதானேய்யா..?!'' என்று ஏரோட்டியிடம் கேட்டார், வாத்தியார். ''அவனவன் தண்ணியில்லாம வெந்து நொந்து கிடக்கான். இதுல போட்டி... பரிசுதான் குறை. பவானிசாகர் அணை காய்ஞ்சு கிடக்கறதால... கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் ஏக்கர்ல நெல், கரும்பு, வாழை, மஞ்சள்னு பரிதாப நிலையில இருக்கு. வழக்கமா ஆகஸ்ட் 15-ம் தேதி திறக்க வேண்டிய எல்.பி.பி. வாய்க்கால்லயும் தண்ணி திறக்கல. மேட்டூர் அணையிலயும் தண்ணி. . .
COMMENT(S):