Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close
Advertisement

செய்திகள்

தேசிய ஓய்வூதிய திட்டம் டயர் II கணக்கு வருமானம் எப்படி?

நம்மில் பெரும்பாலோர், கடைசி காலத்தில் ஓய்வூதியம் என்கிற பென்ஷன் பெற விரும்புகிறோம். இதனை ஒரு காலத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் பெற்றார்கள். கடந்த 2004 ஜனவரிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அரசு, பென்ஷன் என்பதற்கு பதில் 'தேசிய ஓய்வூதிய திட்டம்' என்கிற என்பிஸ் (National Pension System - NPS) மூலம் ஓய்வூதியம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. 2009 ம் ஆண்டு நாட்டு மக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டது. 2017 ஜனவரி நிலவரப்படி, என்பிஎஸ் திட்டத்தில் 103.5 லட்சம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். மொத்தம் ரூ. 1.65 லட்சம் கோடி தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை 18% அதிகரித்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் நிர்வகிக்கப்படும் தொகை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தில், பிராவிடெண்ட் ஃபண்டை விட அதிக வருமானம் கிடைத்து வருவதால், ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள் முதலீட்டு தொகையை அதிகரித்துள்ளார்கள்.

ஸ்பெஷல்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close