Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தை பணமாக்கும் திட்ட வரைவு: மக்கள் என்ன சொல்கிறார்கள்?

 தங்கத்தை பணமாக்கும் திட்ட வரைவு: மக்கள் என்ன சொல்கிறார்கள்?

தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை கடந்த மார்ச் 2015 மத்திய நிதி பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது. 

 

இந்திய குடும்பங்களில் சுமார் 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளது. இந்த தங்கத்தை வெளி கொண்டு வரும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இருக்கும் தங்கத்தை வெளியே கொண்டுவருவதன் மூலமாக நடப்பு கணக்கு பற்றாகுறையை வெகுவாக குறைக்க முடியும் என்பது மத்திய அரசின் திட்டம்.

தங்கத்தை பணமாக்கும் திட்ட வரைவை கடந்த மே மாதத்தில் வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அனுப்பி வைத்தது. மேலும் இந்த வரைவு குறித்த கருத்துகளை பொதுமக்களிடம் இருந்து பெரும் விதமாக நிதியமைச்சகத்தின் இணையதளத்தில் கருத்துகளை பதிவு செய்வதற்கான ஏற்பாட்டையும் நிதியமைச்சகம் செய்திருந்தது. 

 

இதில் 550க்கு மேற்பட்டவர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்திருந்தார்கள். அதில் கவனிக்க வேண்டிய கருத்துகள் குறித்து பார்ப்போம். 
இந்தத் திட்டம் குறித்த கருத்தை பல்வேறு தரப்பினரும்  பதிவு செய்திருந்தார்கள்.  கமாடிட்டி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்  பலரும் கருத்துகளை பதிவு செய்திருந்தார்கள்.   
வட்டி உயர்வு!
 தங்கத்தை பணமாக்கும் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை உயர்ந்த வேண்டும். அதாவது தற்போது வங்கிகள், 1 சதவிகித வட்டி வழங்கலாம் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதை 6 சதவிகிதமாக உயர்ந்த வேண்டும் என்று  கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
கேஒய்சி விதிமுறை தளர்வு!
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 30 கிராம்  தங்கத்தை டெபாசிட் செய்ய முடியும். இதற்கு வங்கி கேட்கும் கேஒய்சி ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். தங்கம் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தங்க நகைக்கு உரிய ரசீது வைத்திருக்கமாட்டார்கள். எனவே கேஒய்சி நடைமுறையை  500 கிராமுக்கு மேல் டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களிடம் மட்டும் கேட்கலாம் என இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
வாடகைக்கு தங்க நகைகள்!
மக்கள் அதிகமாக தங்கம் வாங்குவதை குறைப்பதற்கு  தங்க நகைகள் வாடகைக்கு கிடைக்கும் விதமாக சில நடவடிக்கைகளை செய்யலாம். இதன் விளைவாக பொதுமக்கள் தங்கம் வாங்குவது வெகுவாக குறையும். அதாவது இந்தியாவை பொறுத்தவரை திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கு தங்க நகைகள் அணிந்து செல்வதை வழங்கமாக வைத்துள்ளார்கள். எனவே இது போன்ற சமயங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தங்க நகைகள் வாடகைக்கு கிடைத்தால் தங்கம் வாங்குவது  குறையும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 
டெபாசிட் திட்டத்தில் தங்க நகையை உருக்கிய பிறகே டெபாசிட் செய்ய முடியும். தங்கத்தை உருக்குவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். கோவில்களில் உள்ள தங்கம், அதே போன்று அதிக மதிப்புடைய தங்கத்தை டெபாசிட் செய்யும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் நேரடியாக தங்கத்தை டெபாசிட் ஆக பெற்றுக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. 
கூடுதல் சலுகைகள்!
தங்க நகைகளை டெபாசிட் செய்பவர்களுக்கு கூடுதலாக சில சலுகைகளை வழங்கலாம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டெபாசிட் மூலமாக கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது என அறிவிக்கலாம். 
இந்தத் திட்டம் குறித்த விழிப்பு உணர்வை வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் ஏற்படுத்துவது அவசியம். இதற்கு மக்களை கவரும் விதத்தில் வட்டி விகிதம் இருக்க வேண்டும் என கேர் ரேட்டிங் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. 
இந்தியர்கள் தங்க நகைகள் மீது அதிக சென்டிமென்ட் வைத்திருக்கிறார்கள். இதனால் தங்க நகைகளை உருவாக்குவதை என்பதை அவ்வளவு எளிதில் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என சிலர் குறிப்பிட்டுள்ளார்கள். 
பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். இதில் எதையெல்லாம் மத்திய அரசு நடைமுறைபடுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இரா.ரூபாவதி
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP